அறத்துப்பால் -இல்லறவியல் - தீவினையச்சம்
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து
பரிமேலழகர் உரை
இலன் என்று தீயவை செய்யற்க-'யான் வறியன்' என்று கருதி அது தீர்தற்பொருட்டுப் பிறர்க்குத் தீவினைகளை ஒருவன் செய்யாது ஒழிக; செய்யின் பெயர்த்தும் இலன் ஆகும்-செய்வானாயின் பெயர்த்தும் வறியன் ஆம்.
விளக்கம்:
(அத் தீவினையால் பிறவிதோறும் இலன் ஆம் என்பதாம். 'அன்' விகுதி முன் தனித்தன்மையினும், பின் படர்க்கை யொருமையினும் வந்தது. தனித்தன்மை 'உளனா என் உயிரை உண்டு' (கலித் குறிஞ்சி. 22) என்பதனானும் அறிக. மற்று-அசைநிலை. 'இலம்' என்று பாடம் ஓதுவாரும் உளர். 'பொருளான் வறியன் எனக் கருதித் தீயவை செய்யற்க; செய்யின், அப்பொருளானேயன்றி, நற்குண நற்செய்கைகளானும் வறியனாம்,' என்று உரைப்பாரும் உளர்.)
Translation
Make not thy poverty a plea for ill;
Thy evil deeds will make thee poorer still.
Explanation
Commit not evil, saying, "I am poor": if you do, you will become poorer still.