அறத்துப்பால் -இல்லறவியல் - தீவினையச்சம்
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்
பரிமேலழகர் உரை
எனைப்பகை உற்றானாம் உய்வர்-எத்துணைப் பெரிய பகை உடையாரும் அதனை ஒருவாற்றால் தப்புவர்; வினைப்பகை வீயாது பின் சென்று அடும்-அவ்வாறன்றித் தீவினை ஆகிய பகை நீங்காது புக்குழிப் புக்குக் கொல்லும்
விளக்கம்:
("வீயாது உடம்பொடு நின்ற உயிரும் இல்லை" (புறநா.363) என்புழியும் வீயாமை நீங்காமைக்கண் வந்தது.)
Translation
From every enmity incurred there is to 'scape, a way;
The wrath of evil deeds will dog men's steps, and slay.
Explanation
However great be the enmity men have incurred they may still live. The enmity of sin will incessantly pursue and kill.