அறத்துப்பால் -இல்லறவியல் - தீவினையச்சம்
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்
பரிமேலழகர் உரை
மருங்கு ஓடித் தீவினை செய்யான் எனின்-ஒருவன் செந்நெறிக் கண் செல்லாது கொடுநெறிக்கண் சென்று பிறர் மாட்டுத் தீவினைகளைச் செய்யானாயின்; அருங்கேடன் என்பது அறிக-அவன் அரிதாகிய கோட்டையுடையவன் என்பது அறிக.
விளக்கம்:
(அருமை:இன்மை. அருங்கேடன் என்பதனை, "சென்று சேக்கல்லாப் புள்ள உள்ளில் என்றூழ் வியன்குளம்" (அகநா.42) என்பது போலக் கொள்க. 'ஓடி' என்னும் வினையெச்சம் 'செய்யான்' என்னும் எதிர்மறை வினையின் செய்தலோடு முடிந்தது. இதனால் தீவினை செய்யாதவன் கேடிலன் என்பது கூறப்பட்டது.)
Translation
The man, to devious way of sin that never turned aside,
From ruin rests secure, whatever ills betide.
Explanation
Know ye that he is freed from destruction who commits no evil, going to neither side of the right path.