அறிவியல் தகவல்கள்
- திண்மக் கோணத்தின் அலகு என்ன? – ஸ்டிரேடியன
- துணைக்கோலைக் கொண்டு துல்லியமாக அளவிட வெர்னியர் அளவியை கண்டுபிடித்தவர் யார்? – பியரி வெர்னியர் (பிரான்ஸ்)
- வெர்னியர் அளவியில் மீச்சிற்றளவு என்பது? – (முதன்மை கோல் பிரிவு – துணைக்கோல் பிரிவு) =1 மி.மீ-0.9 மி.மீ = 0.01 செ.மீ
- வெர்னியர் கோலில், துணைக்கோலின் சுழி, முதன்மைக்கோலின் சுழிக்கு வலப்புறமோ அல்லது இடப்புறமோ அமைவது_____எனப்படும் – சுழிப்பிழை எனப்படும்
- வெர்னியர் அளவியில் இரண்டு தாடைகள் இணையும் போது துணைக்கோலின் சுழி, முதன்மை கோலின் சுழிக்கு வலப்புறம் அமைந்தால் அப்பிழை_________எனப்படும் – நேர் பிழை
- வெர்னியர் அளவியில் இரண்டு தாடைகள் இணையும் போது துணைக்கோலின் சுழி, முதன்மை கோலின் சுழிக்கு இடப்புறம் அமைந்தால் அப்பிழை_________எனப்படும் – எதிர் பிழை
- பொருளின் நீளத்தை ஒரு மி.மீட்டரில் நூறில் ஒரு பங்கு அளவிற்கு துல்லியமாக அளவிட பயன்படுவது எது? – திருகு அளவி
- மெல்லிய கம்பி, தாள் மற்றும் தகடு ஆகியவற்றின் தடிமனை அளவிட பயன்படுவது எது? – திருகு அளவி
- ஒரு நிலையான மறைக்குள் இயங்கும் திருகை சுற்றும் போது அதன் முனை முன்னோக்கி நகரும் தொலைவு_____க்கு நேர் தகவில் இருக்கும் – சுற்றப்பட்ட சுற்றுகளுக்கு நேர் தகவில் இருக்கும்
- ஒரு பொருளின் நிறையை ஒரு மி.கிராம் அளவிற்க்கு துள்ளியமாக அளவிட பயன்படும் தராசு எது?- இயற்பியல் தராசு
- இயற்பியல் தராசில் மிக குறைந்த எடை கல் எவ்வளவு? – 10 மி. கிராம்
- இயற்பியல் தராசில் குறிமுள், அலைவுக்குப்பின் அளவுகோல் வந்து நிற்கும் புள்ளி______எனப்படும் – நிலைப்புள்ளி எனப்படும்
- திருகு அளவியின் மீச்சிற்றளவு எவ்வளவு? – 0.01 மி.மீ
- ஒரு பொருளில் அடங்கியுள்ள பருப்பொருள்களின் கன அளவு அதன்______எனப்படும் – நிறை எனப்படும்
- ஊசல் கடிகாரத்தின் தத்துவத்தை கண்டறிந்தவர் யார்? – கலிலியோ