இலங்கையின் பெருமை

65610 சதுர கிலோமீற்றர் பரப்பளவையும் 2,22,77,527 மக்கள் தொகையையும் கொண்டுள்ள ஒரு சிறிய நாட்டின் பெருமைகளைப் பாருங்கள்!! 

  1. உலகில் அதிக அரச விடுமுறைகள் கொண்ட நாடு. 
  2. உலகின் முதலாவது பெண் பிரதம மந்திரியைத் தெரிந்தெடுத்த நாடு. 
  3. ஆசியாவில் சர்வசன வாக்குரிமை கிடைத்த முதலாவது நாடு. 
  4. முதலாவதாக ஆசியாவில் வானொலி ஒலிபரப்பைத் தொடங்கிய நாடு. 
  5. ஆங்கிலேயரின் முதலாவது முடிக்குரிய குடியேற்ற நாடு. 
  6. உலகின் மிக உயர்தர தேயிலையை ஏற்றுமதி செய்யும் நாடு. 
  7. உலகின் அதிகூடுதலான, மிக உயர்தர கருவாவை ஏற்றுமதி செய்யும் நாடு. 
  8. உலகின் முதலாவது வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்பட்ட நாடு. 
  9. உலகில் கிரிக்கெட் அணியொன்றை உருவாக்கி மிக குறைந்த ஆண்டுகளுக்குள் உலக சாம்பியன் ஆன நாடு. 
  10.  மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் தகர்க்க முடியாத ஓட்ட சாதனையை தன்னகத்தே கொண்ட ஒரே நாடு.