அறத்துப்பால் -இல்லறவியல் - ஒப்புரவறிதல்
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற
பரிமேலழகர் உரை
புத்தேள் உலகத்தும் ஈண்டும்-தேவர் உலகத்தும் இவ்வுலகத்தும்; ஒப்புரவின் நல்ல பிற பெறல் அரிது-ஒப்புரவுபோல நல்லன பிற செயல்களைப் பெறுதல் அரிது.
விளக்கம்:
(ஈவாரும் ஏற்பாரும் இன்றி எல்லோரும் ஒரு தன்மையராதலின் புத்தேள் உலகத்து அரிதாயிற்று; யாவர்க்கும் ஒப்பது இதுபோல் பிறிதொன்று இன்மையின், இவ்வுலகத்து அரிதாயிற்று. 'பெறற்கரிது' என்று பாடம் ஓதி, 'பெறுதற்குக் காரணம் அரிது' என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் ஒப்புரவினது சிறப்புக் கூறப்பட்டது.)
Translation
To 'due beneficence' no equal good we know,
Amid the happy gods, or in this world below.
Explanation
It is difficult to obtain another good equal to benevolence either in this world or in that of the gods.