அறத்துப்பால் -இல்லறவியல் - ஒப்புரவறிதல்

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்

பரிமேலழகர் உரை

செல்வம் நயன் உடையான்கண் படின்-செல்வம் ஒப்புரவு செய்வான்கண்ணே படுமாயின்; பயன் மரம் உள்ளூர் பழுத்தற்று-அது பயன்படுமரம் ஊர் நடுவே பழுத்தாற்போலும்.
விளக்கம்:
(உலக நீதி பலவற்றுள்ளும் ஒப்புரவு சிறந்தமையின் அதனையே 'நயன்' என்றார். எல்லார்க்கும் எளிதில் பயன் கொடுக்கும் என்பதாம்.)

Translation

A tree that fruits in th' hamlet's central mart,
Is wealth that falls to men of liberal heart.

Explanation

The wealth of a man (possessed of the virtue) of benevolence is like the ripening of a fruitful tree in the midst of a town.