பரி. யோவான் கல்லூரி, யாழ்ப்பாணம்
பரி. யோவான் கல்லூரி St. John's College |
|
---|---|
முகவரி | |
பிரதான வீதி, சுண்டிக்குளி யாழ்ப்பாணம், வட மாகாணம் இலங்கை |
|
அமைவிடம் | 9°39′27.90″N 80°01′36.90″E |
தகவல் | |
வகை | தனியார் 1ஏபி |
குறிக்கோள் | Lux in tenebris luce (இருளில் ஒளி பிரகாசிக்கிறது, Light shines in the darkness) |
சமயச் சார்பு(கள்) | கிறித்தவம் |
மதப்பிரிவு | ஆங்கிலிக்கம் |
நிறுவல் | 1823 |
நிறுவனர் | வண. யோசப் நைற் |
பள்ளி மாவட்டம் | யாழ்ப்பாணக் கல்வி வலயம் |
ஆணையம் | இலங்கைத் திருச்சபை |
பள்ளி இலக்கம் | 1001029 |
அதிபர் | வண். என். ஜே. ஞானபொன்ராஜா |
தலைமை ஆசிரியர் | டி. ஜே. தேவதாசன் |
ஆசிரியர் குழு | 95 |
தரங்கள் | 1-13 |
பால் | ஆண்கள் |
வயது வீச்சு | 5-18 |
மொழி | தமிழ் |
School roll | 2,166 |
இணையம் | jaffnastjohnscollege.com |
(St. John's College,Jaffna) யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற பாடசாலைகளில் ஒன்று. நல்லூரில் 1823 ஆம் ஆண்டு வண. யோசப் நைற் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை பின்னர் யாழ்ப்பாண நகரில் சுண்டிக்குளி என்ற இடத்துக்கு இடமாற்றப்பட்டது. பல வல்லுனர்களையும் உருவாக்கிய இந்தப் பாடசாலை 1998ஆம் ஆண்டில் தனது 175ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. இக்கல்லூரி கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்குகிறது. இக்கல்லூரிக்கும் யாழ் மத்திய கல்லூரிக்கும் நடைபெறும் மூன்று நாட்கள் நடைபெறும் மிகப் பிரபலமான துடுப்பாட்டப் போட்டி "Battle of the North" என்றழைக்கப் படுகின்றது.
பழைய மாணவர்கள் பெரும்பாலும் பல நாடுகளிலும் நாட்டின் பல பாகங்களிலும் உள்ளதால் இணையம் மூலமாக தொடர்பு கொள்கின்றனர். இது தவிரப் பல சங்கங்களும் இயங்குகின்றன.