காச நோய்
சென்ற வார தொடர்ச்சி....
தடுப்பூசி
1905-1921 ஆண்டுகளுக்கிடையில் காசநோய்க்கெதிராக கண்டுபிடிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்து BCG ஆகும். இதுவே குழந்தைகளில் பெருமளவில் பயன்படுத்தப்படும் தடுப்பு மருந்தாகும்.
- பா.கா.கு (BCG) தடுப்பூசி குழந்தை பிறந்து நான்கு கிழமைக்குள் கொடுக்கப்பட வேண்டும். இதன்போது தழும்பொன்று உருவாகும். இத்தழும்பு உண்டாகாதவிடத்து ஆறுமாதம் தொடக்கம் ஐந்து வயது காலத்திற்குள் இவ்வூசி மீண்டும் கொடுக்கப்பட வேண்டும்.
- மூன்று கிழமைகளுக்கு மேல் இருமல் இருக்குமிடத்து உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும்
- மக்கள் நெரிசலான இடங்கள், சூரிய வெளிச்சம் உள்வராத வீடுகள், இந்நோய் பரவுவதை ஊக்குவிப்பனவாகும்.
- வலுவூட்டும் உணவுக் குறைபாடு இருப்பது இலகுவில் இந்நோய் தொற்ற வழிவகுக்கும்
- பசும்பாலினாற் பரவுங் காசநோயைத் தவிர்க்க நன்கு கொதிக்க வைத்த பால் அல்லது பாய்ச்சர் (Pasteur) முறையிற் பதனிட்ட பாலை அருந்தவும்.
சிகிச்சை
ஆறு மாத காலத்துக்குக் கட்டாய சிகிச்சை அத்தியாவசியம். தவறுமிடத்து எதிர்ப்பு சக்தியுடைய நோய்க்கிருமிகள் உருவாகி நோயைக் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
பயன்படும் மருந்துகள்
- றிபம்பிசின் (Rifampicin)
- ஐசோனியாசிட் (Isoniasid)
- பைரமினமைட் (Pyriminamide)
- எதம்பியூட்டோல் (Ethambutol)
இவ்வகையான நுண்ணுயிர் கொல்லிகளில் சிலவற்றை ஒருசேர எதிர்க்கும் திறனுள்ள (Multi Drug Resistance or Extensively Drug Resistance), M.tuberculosis பக்டீரியா வகை புதிதாக உருவாகியிருப்பதால் சில சமயம் சிகிச்சை சரியான பலனைத் தர முடியாமலும் போகின்றது.
வரலாறு
தொல்பழங் காலத்திலேயே காசநோய் இருந்திருப்பது அறியப்பட்டுள்ளது. இற்றைக்கு கிட்டத்தட்ட 18,000 வருடங்களுக்கு முன்னர் இருந்திருக்கக் கூடிய எருமையின் எச்சங்களிலிலிருந்து Mycobacterium tuberculosis கண்டு பிடிக்கப்பட்டது. Tuberculosis மாடுகள் / கால்நடைகளிலிருந்து தோன்றி, மனிதர்களைத் தாக்கும் திறனுடன் மாற்றப்பட்ட ஒரு இனமா, அல்லது வெவ்வேறு இனங்களில் தொற்று ஏற்படுத்தும் திறமை கொண்ட ஒரு பொது மூதாதையரிலிருந்து தோன்றி, பின்னர் திரிபடைந்த ஒரு இனமா என்ற நிலை இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், மிக அண்மைக்காலத்தில் உருவாகி மாடுகளைத் தாக்கும் மை.போவிசு (M. bovis) இலிருந்து நேரடி வழித் தோன்றலாகவே மை. டியூபர்குலோசிசு (M. tuberculosis) திரிபடைந்து வந்திருக்கிறது என்பது தெளிவாக உள்ளது.
Tubercular decay has been found in the spines of எகிப்துian mummies. Pictured: Egyptian mummy in the British Museum
மனித வரலாற்றுக்கு முன்னைய காலத்தில் (கி.மு. 7000 ஆண்டு) வாழ்ந்த உயிரினங்களின் என்பு எச்சங்களில் TB இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் கி.மு. 3000-2400 ஆண்டுகளில் இருந்த பழம் உடலங்களின் தண்டுவடத்தில் (முண்ணாணில், spines), இந்நுண்ணங்கிகளின் அழிவுகள் காணப்பட்டன. கி.மு. 460 ஆம் ஆண்டளவில், காசநோய் கிரேக்க மொழியில் இப்திசிசிசு (Phthisis) என அழைக்கப்பட்டது. பெரும்பாலும் இறப்பையே ஏற்படுத்தும், காய்ச்சல், மேலும் இரத்தத்துடன் கூடிய இருமலைக் கொண்டிருக்கும், மிக அதிகளவில் பரவலாக இருந்த பயங்கரமான ஒரு நோயாக, காச நோயை இப்போக்கிரேட்டசு (Hippocrates) அறிந்திருந்தார். தென்னமெரிக்காவில், கிட்டத்தட்ட கி.மு 760 இலிருந்து கி.பி. 100 ஆண்டுகளுக்கான இடைப்பட்ட, பராக்கசு நாகரீக (Paracus Culture) காலத்திலேயே, Tuberculosis இருந்ததற்கான ஆதாரங்கள் தென்பட்டன.
செருமன் நாட்டு அறிவியலாளர் ராபர்ட் கோக் டியூபர்குலோசிசு பாசில்லை (tuberculosis bacilli) என்னும் நுண்ணுயிரிகளைக் கண்டுபிடித்தார்.
முற்காலத்தில் இந்த நோயானது ‘உருக்கி நோய்' எனவும் அழைக்கப்பட்டது. இரத்த இருமல், காய்ச்சல், வெளிறிய உடல் போன்ற அறிகுறிகளால் அழிவு ஏற்படுவதால் இநோயை இப்பெயரிட்டு அழைத்தனர். உருக்குதல் என்ற சொல்லின் கிரேக்க சொல்லான phthisis என்ற சொல்லின் பெயர் கொண்டும் இந்நோய் அறியப்பட்டிருந்தது. இந்நோயின் ஒரு நிலையில், தொற்றானது குருதித் தொகுதியினுள்ளும் சென்று, அந்நிலையில் தினை போன்ற தானியத்தின் தோற்றத்தில் சிறிய புண்கள் X - கதிர் படத்தில் காணப்படுகிறது. அது குருனைக் காசநோய் (Miliary tuberculosis) என அழைக்கப்படுகிறது. 1882 இல் Tuberculosis bacillus ஐ , தனிப்படுத்தி, பிரித்தெடுத்த (isolated) அறிவியலாளர் ரோபேர்ட் கொக் (Robert Koch) இன் நினைவாக இந்நோய் 'கொக் நோய்' (Koch disease) எனவும் அழைக்கப்படுகிறது .
இயந்திர தொழில் புரட்சிக்கு முன்னைய காலத்தில், இந்நோயானது இரத்தக்காட்டேரித்தனமாக கருதப்பட்டது. காரணம் ஒரு குடும்பத்தினர் இந்நோயினால் இறந்து போனபின்னர், அக்குடும்பத்திலுள்ள இந்நோய்த் தொற்றுக்குள்ளான ஏனைய அங்கத்தினர், சிறிது சிறிதாக உடல்நலம் குன்றியவர்களாக வருவார்கள். அந்நிலமைக்குக் காரணம் அந்த இறந்துபோனவரின் ஆவியே என்றும், அது மற்றவர்களின் வாழ்க்கையை உறிஞ்சி அழிப்பதாக மக்கள் நம்பி வந்தனர். மேலும் காசநோய்க்கு ஆட்பட்ட மனிதர்களில் தோன்றும் அறிகுறிகளும் அவர்களை அவ்வாறு நம்ப வைத்திருந்தது. அதிக ஒளியினால் தாக்கப்படக் கூடிய சிவந்த, வீங்கிய கண்கள், வெளிறிய தோல், மிகவும் குறைந்த உடல் வெப்பம், பலவீனமான இதயம், இரத்தத்தை வெளியேற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் அவர்களை அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கைக்கு தள்ளியிருந்தது. இரத்தம் உறிஞ்சப்படும் காரணத்தாலேயே இவ்வாறு இருமும்போது இரத்தம் வருகிறது என்று நினைத்தார்கள். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில், இந்த காச நோயானது சுய இன்பம் மேற்கொள்ளும் காரணத்தால் ஏற்படுவதாகவும் ஒரு நம்பிக்கை நிலவியது.
1020 ஆம் ஆண்டில் இபுன் சினா (Ibn Sina) என்பவர் எழுதிய மருத்துவத்தின் அடிக்கோட்பாடுகள் (The Canon of Medicine) என்னும் நூலில் இருந்து இந்நோய் பற்றிய படிப்பு துவங்கியது எனக் கூறலாம். இது ஒரு தொற்றுநோய் என முதலில் கண்டு பிடித்து அறிவித்து, இது சலரோகம் அல்லது நீரிழிவு நோயுடன் தொடர்புடையது என முதலில் கூறி, இது மண் அல்லது நீரினால் பரவலாம் என்றுக் கூறிய அறிவியலாளர் இவரே. இந்நோயின் பரவலைத் தடுப்பதற்கான முறைய உருவாக்கியவரும் இவரேயாவார். முன்னைய காலத்தில் சிகிச்சை முறைகள் பொதுவாக உணவை மாற்றுவதை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருந்தது.
1689 ஆம் ஆண்டில் ரிச்சர்டு மார்ட்டன் (Dr.Richard Morton) என்பவரினால் நுரையீரலில் ஏற்படும் காசநோய்க்கும் டியூபர்கியூலோசிசுக்கும் இடையிலான தொடர்பு நிறுவப்பட்டு இருந்த போதிலும், இந்நோயின் பல வேறுபட்ட அறிகுறிகளின் காரணமாய், 1820 வரையில், இது ஒரு தனியான நோயென்பது சரியாக அறியப்படாமல் இருந்ததுடன், 1839 இல் J.L.Schönlein என்பவர் குறிப்பிடும்வரை Tuberculosis என பெயரிடப்படாமல் இருந்தது. மாமத்து (Mammoth) குகையின் உரிமையாளரான முனைவர் சான் குரோகன் (Dr. John Croghan) என்பவர் 1838 – 1845 ஆண்டுப் பகுதியில், இந்நோயால் தாக்கப்பட்ட சில நோயாளிகளை இக்குகைக்குள் இருக்கும் மாறாத வெப்பநிலையும், சுத்தமான காற்றும் குணப்படுத்திம் என்றெண்ணி கொண்டு வந்து வைத்திருந்த போதும், அவர்கள் ஒரு வருடத்திலேயே இறந்து விட்டனர். இந்நோய்க்கான முதல் சிகிச்சை நிலையம் 1854 ஆம் ஆண்டில் செர்மனியில் கோபர்சுடோர்பு (Görbersdorf) என்னுமிடத்தில், (தற்போது போலந்தில் சோக்கோலோவ்சுக்கோ (Sokołowsko) என்னுமிடத்தில்) எர்மன் பிரேமர் (Hermann Brehmer) என்பவரால் தொடங்கி வைக்கப்பட்டது.