குருதி அழுத்தம்
ஒலிச்சோதனை முறை
இதயத்துடிப்புமானியுடன் கூடிய அனிராய்டு நாடியழுத்தமானி ஒலி கேட்டல் முறை
இரசவாயுவமுக்கமானி
ஒலிச்சோதனை முறையில் (லத்தீனில் கேட்டல் என்ற பொருள்படும்) இதயத்துடிப்புமானி மற்றும் நாடியழுத்தமானி ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இது, தோராயமாக இதயம் இருக்கும் செங்குத்து உயரத்தில் மேற்புயத்தைச் சுற்றி வைக்கப்படும் காற்று அடைக்கப்பட்ட(ரிவா-ரோசி ) சுற்றுப்பட்டை ஒன்று பாதரசம் அல்லது அனிராய்டு அழுத்தமானியுடன் இணைக்கப்பட்டிருக்கும். பாதரச அழுத்தமானி பாதரசத்தின் செங்குத்து உயரத்தை அளவிட்டு அளவுப் பிரிப்பு அவசியமில்லாமல் துல்லியமான முடிவைத் தருகிறது. மற்ற முறைகளை பாதிக்கும் அளவுப் பிரிப்பு நகர்வு மற்றும் பிழைகள் இதில் ஏற்படாது. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் போன்ற ஆபத்து நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு உயர் இரத்த அழுத்தத்தின் மருத்துவ அளவீட்டிற்காகவும் மருத்துவ சோதனைகளுக்காகவும் பாதரச அழுத்தமானி அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
வழுவழுப்பாகவும் உடம்போடு ஒட்டியும் இருக்கும் சரியான அளவையுடைய சுற்றுப்பட்டை பொருத்தப்படும். பிறகு தமனி முற்றிலும் இறுக்கிப் பொருத்தும் வரை ரப்பர் குமிழியை திரும்ப திரும்ப அழுத்துவதன் மூலம் கைமுறையாக காற்று ஏற்றப்படுகிறது. முழங்கையின் புயத்தமனியை இதயத்துடிப்புமானியின் மூலம் கேட்டுக்கொண்டே சோதனையாளர் மெதுவாக சுற்றுப்பட்டையில் இருக்கும் காற்றை வெளியேற்றுவார். தமனியில் இரத்த ஓட்டம் ஆரம்பிக்கும் போது, கொந்தளிப்பு ஓட்டம் "ஷ்ஷ்ஷ்" அல்லது மோதும் சத்தத்தை உருவாக்கும் (முதல் கோரட்காஃப் சத்தம்). இந்த சத்தம் எந்த அழுத்தத்தில் முதலில் கேட்கப்பட்டதோ அதுவே இதய சுருக்கியக்க அழுத்தம் எனப்படும். இதய விரிவியக்க தமனி சார்ந்த அழுத்தத்தைக் கண்டறிவதற்கு சத்தம் கேட்கப்படாத (ஐந்தாவது கோரட்காஃப் சத்தம்) வரைக்கும் சுற்றுப்பட்டை அழுத்தம் மேலும் வெளியேற்றப்படும்.
இரத்த அழுத்த அளவீடுகள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து ஒலிச்சோதனை முறை பெருமளவு பயன்பாட்டில் இருந்துவந்தது, ஆனால் படிப்படியாக தானியங்கி முறைக்குப் பொருத்தமாக இருக்கும் தோலினுள் உட்செலுத்தப்படாமல் செய்யப்படும் மற்ற உத்திகள் முறைக்கு மாற்றப்பட்டது.
ஆஸ்லமேட்ரிக் முறை
ஆஸ்லமேட்ரிக் முறை அதாவது மின்னணுவியல் முறை என்பது அழுத்த அலைவுகளை அளக்கும் அளவீட்டு முறையாகும். இது சிலநேரங்களில் நீண்டகால அளவீடுகளிலும் பொது வகைத் தொழிலாற்றுதலிலும் பயன்படுத்தப்படுகிறது. ஒலிச்சோதனை முறையில் பயன்படுத்தப்படும் கருவியைப் போன்றே இதுவும் இருந்தாலும், இதயத்துடிப்புமானி மற்றும் வல்லுநரின் காதுகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக இரத்த ஓட்டத்தைக் கண்டறிவதற்கு இதனுடன் மின்னணுவியல் அழுத்த உணர்கருவி (ஆற்றல் மாற்றி) பொருத்தப்பட்டிருக்கிறது. நடைமுறையில், அழுத்த உணர்கருவி என்பது இரத்த அழுத்தத்தின் எண் அளவீடுகள் கொண்ட அளவுப் பிரிப்பு செய்யப்பட்ட மின்னணுவியல் கருவியாகும். துல்லியமான தன்மையைக் கொண்ட பாதரச அழுத்தமானியைப் போல் அல்லாது இதில் துல்லியமான அளவிற்காக அளவு பிரிப்பு குறிப்பிட்ட கால இடைவெளியில் சரிபார்க்கப்பட வேண்டும். பெரும்பாலான நேரங்களில் சுற்றுப்பட்டை மின்சாரத்தினால் இயக்கப்படும் எக்கி மற்றும் வால்வு மூலம் காற்று ஏற்றப்பட்டு வெளியேற்றப்படும். மேற்புயத்தில் பொருத்தப்படவேண்டும் என்றிருந்தாலும் மணிக்கட்டிலேயும் (இதய உயரத்திற்கு உயர்த்தி) இது பொருத்தப்படலாம். துல்லியத்தில் அவைகள் அதிகமாக வித்தியாசப்படும் மேலும் குறிப்பிட்ட இடைவெளியில் சரிப்பார்க்கவேண்டும். தேவைப்பட்டால் மறுபடியும் அளவு பிரிப்பு செய்யப்படவேண்டும்.
ஒலிச்சோதனை நுட்பத்தை விட ஆஸ்லமேட்ரிக் அளவீட்டைப் பயன்படுத்துவதற்கு குறைந்த திறமையே தேவைப்படும். பயிற்சியற்ற பணியாளர்கள் பயன்படுத்துவதற்கும் நோயாளிகள் தானியங்கி முறையில் கண்காணிப்பதற்கும் இது பொருத்தமாக இருக்கலாம்.
இதய சுருக்கியக்க தமனி சார்ந்த அழுத்தத்தைவிட அதிகமாக சுற்றுப்பட்டையில் முதலில் காற்று ஏற்றப்படுகிறது, அதற்கு பிறகு 30 நொடிகளுக்குப் பிறகு இதய விரிவியக்க அழுத்தத்திற்கு கீழ் குறைக்கப்படுகிறது. இரத்த ஓட்டம் இல்லாமல் (இதய சுருக்கியக்க அழுத்தத்தை விட சுற்றுப்பட்டை அழுத்தம் அதிகரித்தல்) அல்லது தடுக்கப்படாமல் (இதய விரிவியக்க அழுத்தத்தை விட சுற்றுப்பட்டை அழுத்தம் குறைதல்) இருக்கும் போது சுற்றுப்பட்டை அழுத்தம் கண்டிப்பாக மாறாமல் இருக்கும். சுற்றுப்பட்டையின் அளவு சரியாக இருத்தல் மிகவும் அவசியமாக இருக்கிறது: குறைந்த அளவுடைய சுற்றுப்பட்டைகள் மிகவும் அதிகமான அழுத்தத்தைக் கொடுக்கும் மற்றும் அளவு பெரியதாக இருக்கும் சுற்றுப்பட்டைகள் மிகவும் குறைவான அழுத்தத்தைக் கொடுக்கும். இரத்த ஓட்டம் ஓரளவிற்கு இருக்கும் போது அழுத்த உணர்கருவியால் கண்காணிக்கப்பட்ட சுற்றுப்பட்டை அழுத்தம் புயத்தமனியின் தொடர் விரிதல் மற்றும் சுருங்குதலுடன் ஒத்திசைந்திருப்பதில் குறிப்பிட்ட கால இடைவெளியில் வேறுபட்டிருக்கும், அதாவது அது அலைவுறும். முதல் விவரங்களிலிருந்து அளக்கப்படாமல் ஒரு வழிமுறையைப் பயன்படுத்தி இதய சுருக்கியக்க அழுத்தம் மற்றும் இதய விரிவியக்க அழுத்தத்தின் மதிப்புகள் கணக்கிடப்படுகின்றன. கணக்கிடப்படும் முடிவுகள் காண்பிக்கப்படும்.
தமனி சார்ந்த விழி வெண்படலம், குருதி ஊட்டக்குறை, முன்சூல்வலிப்பு, மாறுநடைநாடி மற்றும் புதிர்நடைநாடி ஆகிய சுற்றோட்ட சிக்கல்கள் மற்றும் இதய சிக்கல்கள் இருக்கும் நோயாளிகளுக்கு இந்த முறையின் மூலம் அளவிடும் போது ஆஸ்லமேட்ரிக் கண்காணிப்புகள் துல்லியமற்ற அளவுகளை காண்பிக்கலாம்.
நடைமுறையில் வேறுபட்ட முறைகள் ஒரே மாதிரியான முடிவுகளைக் கொடுக்காது; ஒலிச்சோதனை முடிவுகளுக்குப் பொருந்தும் அளவீட்டைக் கொடுப்பதற்காக வழிமுறை மற்றும் பரிசோதனை மூலம் பெறப்பட்ட காரணிகள் ஆஸ்லமேட்ரிக் முடிவுகளை சரிசெய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. இதய சுருக்கியக்கம், சராசரி (நடுமட்டம்) மற்றும் இதய விரிவியக்க புள்ளிகளைத் தீர்மானிப்பதற்கு உடனடியான தமனிசார்ந்த அழுத்த அலைவடிவத்தின் கணினி பயன்படுத்தி செய்யப்படும் பகுப்பாய்வை சில கருவிகள் பயன்படுத்துகின்றன. பல ஆஸ்லமெட்ரிக் கருவிகள் உறுதிசெய்யப்படாத காரணத்தினால் மருத்துவ மற்றும் முக்கிய பராமரிப்புக் கூடங்களுக்கு இது போன்ற கருவிகள் பொருத்தமாக இருக்காது என்ற எச்சரிக்கை கொடுக்கப்படவேண்டும்.
தோலினுள் உட்செலுத்தாமல் செய்யப்படும் இரத்த அழுத்த பரிசோதனைக்கு NIBP என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இது அதிகமாக ஆஸ்லமேட்ரிக் கண்காணிப்பு கருவியை விவரிக்க பயன்படுத்தப்படுகிறது.
தற்காலிக உயர் இரத்த அழுத்தம்
ஒரு மருத்துவரின் அலுவலத்தில் சில நோயாளிகளுக்கு செய்யப்படும் இரத்த அழுத்த பரிசோதனை அவர்களுடைய சரியான இரத்த அழுத்தத்தை காண்பிக்காமல் இருக்கலாம். 25% நோயாளிகளுக்கு அவர்களுடைய சரியான இரத்த அழுத்ததை விட அதிகமாக இருப்பது போல் அலுவலகத்தில் செய்யப்படும் அளவீட்டில் காண்பிக்கும். உடல்நல பராமரிப்பு நிபுணர்களினால் செய்யப்படும் பரிசோதனை தொடர்பான மனக்கலக்கத்தினால் இது ஏற்படுகிறது. இந்த வகையான பிழைகளை தற்காலிக உயர் இரத்த அழுத்தம் (WCH) என்று அழைப்பர். இந்த வகையான நோயாளிகளுக்கு உயர் இரத்த அழுத்தம் தவறாக அறுதியிடல் செய்வதன் காரணத்தினால் அவர்கள் தேவையில்லாமல் ஆபத்தை விளைவிக்ககூடிய மருந்துகளை எடுத்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். மருத்துவமனை அல்லது அலுவலகத்தின் ஒரு அமைதியான பகுதியில் 15 முதல் 20 நிமிடங்கள் இரத்த அழுத்தத்தின் தானியங்கி அளவீடுகளை பயன்படுத்துவதன் மூலம் WCH குறைக்கப்படலாம் (ஆனால் தவிர்க்க முடியாது).
இந்த விளைவுகளின் முக்கியத்துவம் குறித்த வாதங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.சில உணர்ச்சி வசப்படக்கூடிய நோயாளிகள் அவர்களுடைய தினசரி வாழ்க்கையில் நடக்கும் அதிகமான விஷயங்களினால் உணர்ச்சிவசப்படுவார்கள். அவர்களுக்கு சிகிச்சை அவசியமாக இருக்கலாம். சில நோயளிகளுக்கு மருத்துவரின் அலுவலகத்தில் குறைந்த இரத்த அழுத்த அளவீடுகளும் கிடைக்கக்கூடும்.
வீட்டிலிருந்தே கண்காணித்தல்
ஒரு நாளின் ஒட்டுமொத்த இரத்த அழுத்தத்தை அளவிடும் கருவிகள் நாள்முழுவதும் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் அளவுகளைக் காண்பிக்கும். இரவு நேரங்களில் தற்காலிக உயர் இரத்த அழுத்தம் போன்ற சிக்கல்களைக் கண்டறியவும் கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. தூங்கும் நேரத்தைத் தவிர்த்து, ஒரு நாளின் ஒட்டுமொத்த இரத்த அழுத்தத்தைக் கண்காணிக்கும் கருவிக்கு பதிலாக வீட்டிலிருந்தபடியே கண்காணிக்கும் கருவிகள் இது போன்ற காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.வீட்டிலிருந்தே கண்காணிக்கும் கருவிகள் உயர் இரத்த அழுத்தத்தைச் சமாளிப்பதற்கும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் இரத்த அழுத்தம் தொடர்பான மருந்துகளைக் கண்காணிப்பதற்கும் பயன்படுத்தப்படலாம். ஒரு நாளின் ஒட்டுமொத்த இரத்த அழுத்தத்தை அளவிடும் கருவிகளோடு ஒப்பிடும் போது வீட்டிலிருந்தே கண்காணிக்கும் கருவிகள் மிகவும் பயனுள்ளதாகவும் குறைந்த செலவில் இருக்கும் மாற்றுவழியாகவும் இருப்பதாக அறியப்படுகின்றன.
தற்காலிக உயர் இரத்த அழுத்தம் தாக்கம் ஒரு பக்கம் இருக்க, பெரும்பாலான நோயாளிகளுக்கு மருத்துவக் கூடத்திற்கு வெளியே செய்யப்படும் தமனி சார்ந்த அழுத்த அளவீடுகள் பொதுவாக குறைவாகவே காண்பிக்கப்படுகின்றன. உயர் இரத்த அழுத்தத்தின் ஆபத்துகள் மற்றும் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தமனிசார்ந்த அழுத்தத்தை குறைப்பதில் உள்ள பலன்கள் ஆகிய ஆய்வுகள் மருத்துவ சூழலில் உள்ள அளவீடுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.
இரத்த அழுத்த அளவீடு எடுப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக தேனீர் அருந்துதல், புகையிலை புகைத்தல் அல்லது கடுமையான உடற்பயிற்சி ஆகியவற்றை செய்யாமல் இருந்தால் மட்டுமே துல்லியமான அளவீடு கிடைக்கும். தேங்கு பை நிறைந்து இருந்தாலும் கூட இரத்த அழுத்த அளவீட்டில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. அதனால் ஒருவருக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தோன்றினால் அளவு எடுப்பதற்கு முன்னதாக கழித்து விட்டு வருவது நல்லது. அளவீடு எடுப்பதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னதாக ஒருவர் பாதங்களை தரையில் பதியவைத்து மூட்டுகளை குறுக்கே போடாமல் நாற்காலியில் நேராக உட்காரவேண்டும். சட்டைகளுக்கு மேலே சுற்றுப்பட்டையை வைத்து எடுக்கப்படும் அளவீடுகள் துல்லியம் குறைவாக இருக்கும் என்பதனால் இரத்த அழுத்த சுற்றுப்பட்டை எப்போதும் தோலில் படும்படியே எடுக்கப்படவேண்டும். அளவீடு எடுக்கும் போது பயன்படுத்தப்படும் கரம் தளர்வாகவும் இதய அளவிற்கும் வைக்கப்படவேண்டும். எடுத்துக்காட்டாக மேசையின் மேல் இருக்கும் படி வைக்கப்படவேண்டும்.
தமனி சார்ந்த அழுத்தம் நாள்முழுவதும் மாறிக்கொண்டே இருக்கும் என்பதனால் அளவீடுகளை ஒப்பிடுவதற்காக நீண்ட கால அளவுகளின் மாற்றங்கள் நாளின் அதே நேரத்தில் கண்காணித்தல் அவசியமாக இருக்கிறது. பொருத்தமான நேரங்களாவன:
- விழிப்பு ஏற்பட்ட உடனேயே (முகம், கை, கால்களை கழுவுதல் மற்றும் காலை உணவு/பானம் அருந்துதும் முன்னதாக), உடல் ஓய்வில் இருக்கும் போதே,
- வேலை முடித்தவுடன்.
தானியங்கி தன்னிறைவான இரத்த அழுத்த கண்காணிப்புக் கருவி குறைந்த விலைக்கே கிடைக்கிறது. சில கருவிகளில் ஆஸ்லமேட்ரிக் முறைகளோடு கோரட்கார்ஃப் அளவீடுகளும் சேர்ந்து இருக்கிறது. சீரற்ற இதயத்துடிப்பு இருக்கும் நோயாளிகளுக்கு வீட்டிலேயே அவர்களுடைய இரத்த அழுத்தத்தைத் துல்லியமாக அளவிடுவதற்கு இது உதவுகிறது.
தோலினுள் உட்செலுத்தி செய்யப்படும் அளவீடுகள்
தமனி சார்ந்த இரத்த அழுத்தம் (BP) மிகவும் துல்லியமாக தமனிசார்ந்த வடிகுழாய் மூலம் உட்செலுத்தி அளவிடப்படுகிறது. வடிகுழல் குழலுள் உட்செலுத்திச் செய்யப்பபடும் தமனி சார்ந்த அழுத்த அளவீடுகளில் உடல் வடிகுழாய் ஊசியை தமனியில் வைப்பதன் மூலம் தமனி சார்ந்த அழுத்தம் நேரடியாக அளவிடப்படுகிறது (பொதுவாக ஆரை, ஃபீமர, புறங்கால் தமனி அல்லது மேற்கைச் சிரை). இந்த செயல்முறை அங்கிகரிக்கப்பட்ட எந்த மருத்துவராலோ சுவாசத்திற்குரிய சிகிச்சையாளர் மூலம் செய்யப்படலாம்.
வடிகுழாயில் திரவம் நிரம்பிய கருவி கிருமீ நீக்கியுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இது மின்னணுவியல் அழுத்த ஆற்றல் மாற்றியுடன் இணைக்கப்பட்டிருக்கும், இந்த கருவியின் முக்கியப் பயன்பாடு ஒவ்வொரு துடிப்பின் அழுத்தமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு ஒரு அலைவடிவம் (அழுத்தம்-நேரம் வரைப்படம்) காண்பிக்கப்படும். இது போன்ற உட்செலுத்தி செய்யப்படும் அளவீட்டு முறை பொதுவாக மனித மற்றும் கால்நடை முனைப்புக் கவனிப்புப் பிரிவு, உணர்வகற்றியல் மற்றும் ஆராய்ச்சியில் செய்யப்படும்.
தோலினுள் உட்செலுத்தி செய்யப்படும் குழல்மைய அழுத்த கண்காணித்தலானது எப்போதாவது இரத்த உறைவு, நோய்த்தொற்று மற்றும் இரத்தக்கசிவு போன்ற சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. தோலினுள் உட்செலுத்தி செய்யப்படும் தமனி சார்ந்த சோதனையில் இருக்கும் நோயாளிகளை மிகவும் கவனமாக கண்காணித்தல் அவசியமாக இருக்கிறது. ஏனெனில் வடிகுழாய் துண்டிப்படைந்தால் அதிகமான இரத்தக்கசிவை ஏற்படுத்தும் ஆபத்து இதில் இருக்கிறது. தமனி சார்ந்த அழுத்தத்தில் அதிகமான வேறுபாடுகள் இருக்கும் என எதிர்நோக்கப்படும் நோயாளிகளுக்காக இது ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளது.
தோலினுள் உட்செலுத்தி செய்யப்படும் குழல்மைய அழுத்த காண்காணிப்புகள் அழுத்தத்தை கண்காணிக்கும் கருவியாகும். இது அழுத்தம் பற்றிய தகவல்களை கண்டறிந்து அதை திரையிடுவதற்காகவும் செயல்படுத்துவதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. விபத்து சம்பந்தப்பட்ட பிரிவு, அவசரப் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை அறை ஆகியவற்றில் வெவ்வேறான தோலினுள் உட்செலுத்தி செய்யப்படும் குழல்மைய அழுத்தக் கண்காணிப்புக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் ஒற்றை அழுத்தம், இரட்டை அழுத்தம் மற்றும் பல்-அளவுரு ஆகியவையும் அடங்கும் அதாவது (அழுத்தம்/வெப்பநிலை) தமனி சார்ந்த அழுத்தம், மைய சிரை, சுவாசத்திற்குரிய தமனி சார்ந்த அழுத்தம், இடது ஏட்ரியம், வலது ஏட்ரியம், ஃபீமர தமனி சார்ந்த அழுத்தம், தொப்புள் சிரை, தொப்புள் சிரை தமனி சார்ந்த அழுத்தம் மற்றும் மண்டையக அழுத்தங்கள் ஆகியவற்றை அளவிடவும் பின்-தொடர்தல் செய்யவும் இந்த கண்காணிப்புக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
குழல்மைய அழுத்த அளவுருக்கள் கண்காணிப்புக் கருவியின் நுண்ணியகணினிக் கருவியின் மூலம் பெறப்படுகிறது. வழக்கமாக இதய சுருக்கியக்கம், இதய விரிவியக்கம், மற்றும் சராசரி (நடுமட்டம்) அழுத்தங்கள் துடிப்பு அலைவடிவங்களுக்காக ஒரே நேரத்தில் காண்பிக்கப்படுகின்றன. (அதாவது தமனி சார்ந்த மற்றும் சுவாசத்திற்குரிய தமனி சார்ந்த அழுத்தங்கள்) சில கண்காணிப்புக் கருவிகள் CPPயை (பெருமூளைச் சிரை உறுப்பு வழி செலுத்தல் அழுத்தம்) கணக்கிட்டும் காண்பிக்கும். பொதுவாக கண்காணிப்புக் கருவியில் முன்னதாக பூச்சிய நிலையில் உள்ள பொத்தான் அழுத்தத்தை மிகவும் சீக்கிரமாகவும் சுலபமாகவும் பூச்சியத்திற்கு கொண்டுவந்துவிடும். நோயாளிகளை கண்காணிக்கும் பொறுப்பிலிருக்கும் மருத்துவத் துறை வல்லுநருக்கு உதவும் வகையில் அலாரம் வரம்புகளை அமைக்கலாம். காண்பிக்கப்படும் வெப்பநிலை அளவுருக்களில் உயர் மற்றும் தாழ் அலாரங்கள் அமைக்கப்படலாம்.