குட்டி நரியும் எட்டா திராட்சையும்

குட்டி நரியும் எட்டா திராட்சையும்

குட்டி நரி காட்டிலே

குதிச்சு குதிச்சு போனதாம்

 

அந்த நேரம் பார்த்துதான்

திராட்சை வாசம் வந்ததாம்

 

திராட்சை தின்னு பார்க்கவே

ஆசை கொண்டு நடந்ததாம்

 

திராட்சைத் தோட்டம் பார்த்ததும்

ஆசை அதிகம் ஆனதாம்

 

எட்டிப் பரிச்சு தின்னவே

எம்பி எம்பி பார்த்ததாம்

 

குள்ள நரியா னதால்

பரிக்க முடியாப் போனதாம்

 

எட்டா திராட்சை பார்த்துதான்

புளிக்கும் பழம் என்றதாம்

 

திராட்சை இன்றி போகவே

திரும்பி நடந்து சென்றதாம்