இரத்தச் சோகை நோய்

இரும்புச் சத்துக்கள்: பொதுவாகத் தரப்படும் இரும்பு சத்து ஃபெரஸ் சல்பேட், ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை (வாய்மூலமாக) எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

உணவுச் சத்து: இரும்புச் சத்துள்ள உணவு வகைகளாவன:

கரும்பச்சைக் கீரை வகைகள், எடுத்துக்காட்டாக பசலைக் கீரை.

இரும்புச் சத்துள்ள தானிய வகைகள்:

முழு தானிய வகைகளான பழுப்பு அரிசி

பீன்ஸ்

கொட்டைகள்

இறைச்சி

பாதாம்

இரும்புச் சத்துக் குறைபாட்டினால் வரும் சோகை ஆபத்தான, நீடித்த சிக்கல்களை ஏற்படுத்துவதில்லை. எனினும் சில பிரச்சினைகள் கீழே பட்டியல் இடப்பட்டுள்ளன:

சோர்வு.

இரும்புச் சத்துக் குறைவு சோகை ஒருவரை சோர்வாகவும் சோம்பலாகவும் (ஊக்கமின்மை) மாற்றி விடும். இதன் விளைவாக வேலையில் சுறுசுறுப்பாக இல்லாமல் செயலாற்றல் குறைந்தவராக மாறிவிடுவார்.

நோய்த்தடுப்பு அமைப்பு

இரும்புச் சத்துக் குறைவு சோகை நோய்த்தடுப்பு மண்டலத்தைத் தாக்கலாம் (உடலின் இயற்கையான நோய்த்தடுப்பு அமைப்பு). இது ஒருவரை நோய்க்கும், தொற்றுநோய்க்கும் எளிதில் பலியாகுமாறு பலவீனமாக்கிவிடும்.

இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சினைகள்

கடுமையான சோகைக்கு ஆளான வயதுவந்த ஒருவருக்கு இதயத்தையும் நுரையீரலையும் பாதிக்கும் பிரச்சினைகள் ஏற்படலாம். உதாரணமாக,

இதய மிகைத்துடிப்பு (Tachycardia- அசாதரணமாக இதயம் மிகையாகத் துடித்தல்)

இதயம் செயலிழத்தல்-உடலுக்கு வேண்டிய இரத்தத்தைத் தகுந்தவாறு இதயத்தால் செலுத்தமுடியாமை.

கர்ப்பம்

இரத்தச் சோகையுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு பேறுகாலத்திற்கு முன்னும் பின்னும் சிக்கலான பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். பேறுகாலத்திற்குப் பின்னான மனவழுத்தம் ஏற்படவும் கூடும் (சில பெண்களுக்கு குழந்தைப் பிறப்புக்குப் பின் ஏற்படும் ஒருவகையான மன அழுத்தம்)