முத்தமிழ் விழா - 2023

"இன்று அல்ல நேற்று அல்ல ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் திருவாய்" மலர்ந்தருளிய வாக்கிற்கிணங்க 30/04/2023 அன்று பிரமாண்டமாக நடந்தேறிய முத்தமிழ் விழா- 2023 ற்கு வருகைதந்த எம் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் முத்தமிழ் மன்றம் சௌத்தென்ட் சார்பாக பலகோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தமிழரின் பாரம்பரிய இன்னிய வார்த்திய அணியுடன் அழைத்துவரப்பட்ட பிரதமவிருந்தினர்கள், மக்கள்திரள் அலைமோத விழாக்கோலம்பூண்டு அரங்கமன்றம் களைகட்டியது. அரங்கில், நம் தாய்மொழியாம் தமிழ் மொழியையும் தமிழர் பண்பாட்டையும் பறைசாற்றும் பலதரப்பட்ட நிகழ்ச்சிகளும்,பிரதானமாக சிலப்பதிகார நாடகம், இராவணேசன் கூத்து, கிராமிய நடனங்கள், நாநெகிழ் தமிழ் பாடல்கள், சிறப்பு பட்டிமன்றம் என அரங்கை அதிரவைத்த அழகு நிகழ்ச்சிகள் எம் அனைவரையும் மகிழ்வித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ் அனைத்து நிகழ்விற்கும் பின்னால் இருந்த அந்த அயராத உழைப்பின் உச்சத்தை நாம் அனைவரும் கண்டு இன்புற்றோம் என்றால் மிகையாகாது. இதை சாத்தியமாக்கிய சௌத்தென்ட் தமிழ் கல்விக்கூட ஆசிரியப் பெருந்தகைகள், பெற்றோர்களின் அயராத கடின உழைப்பு, மாணவச் செல்வங்களின் சிறப்புப் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இவர்களிற்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து உவகையடைவதில் முத்தமிழ் மன்றம் பெருமை கொள்கின்றது.

முதலாவதாக, நேரத்தையும் தூரத்தையும் பொருட்படுத்தாது எமது அழைப்பை ஏற்று இந்நிகழ்விற்கு வருகைதந்த மதிப்பிற்குரிய பிரதமவிருந்தினர்கள், விருந்தினர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள், எம் மாணவச் செல்வங்கள் அத்துடன் ஊக்கமளித்த நலன் விரும்பிகள் மற்றும் விழாவை சிறப்பித்த அனைத்து உறவுகளிற்கும் முத்தமிழ் மன்றம் -சௌத்தென்ட் சார்பாக எமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

நம் அழைப்பை ஏற்று வருகை தந்த நாம்தமிழர் பிரித்தானிய உறவுகள், பிரித்தானிய தமிழர் பேரவையின் பிரதான ஒருங்கிணைப்பாளர்கள், தமிழர் வீரக்கலைப் பாசறை உறவுகள், மற்றும் சிறப்பாக இவ்வாண்டு களமிறங்கி விழா சிறப்புற உழைத்த "முத்தமிழ் மன்ற இளையோர் அணியினர்" அனைவருக்கும் முத்தமிழ் மன்றம் - சௌத்தென்ட் சார்பாக எமது அன்பு கலந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும் இந்நிகழ்விற்கு நிதி அனுசரணை வழங்கிய சௌத்தென்ட் வர்த்தக நிறுவனங்கள், விளம்பரங்களை வழங்கியவர்கள், ஒலி ஒளி வசதிகளை செய்தவர்கள் நன்கொடை வழங்கியவர்கள், உணவுப் பொருட்கள் வழங்கியவர்கள் மற்றும் உணவு தயாரிக்க தம்மாலான உதவிகளை அளித்த உறவுகள் மேலும் இந்நிகழ்வு சிறப்புற பாடுபட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் முத்தமிழ் மன்றம் சார்பாக எம் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

முத்தமிழுக்கு கோலாகலமாக விழா எடுக்கும் இத்தருணத்தில் முத்தமிழ் மன்றம் சார்பாக. சித்திரை முப்பதாம் திகதி (30/04/2023) அன்று தாயகத்தில் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பிரதேசத்தில் ஊறணி எனும் கிராமத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் சிறார்களிற்கு உணவும். கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டது. இவ் அறச்செயலை ஒழுங்கமைத்த நம் தாயக செயல்பாட்டாளர்களிற்கும் இத்தருணத்தில் முத்தமிழ் மன்றம் சார்பாக எம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் விழா மண்டப அலங்காரம் செய்ய உதவியவர்களுக்கும் விழாவின் இறுதியில் நின்று மண்டபத்தை சுத்தம் செய்ய உதவியவர்களுக்கும் எம் நன்றிகளை கூறிக்கொள்வதோடு இந் முத்தமிழ் விழாவில் பங்குகெடுத்து விழாவை சிறப்பித்தது போல் மீண்டும் எதிர்வரும் ஆடி மாதம் நடைபெறவுள்ள மெய்வல்லுனர் போட்டியில் உங்கள் அனைவரையும் சந்திக்க சௌத்தென்ட் முத்தமிழ் மன்றம் எதிர்பார்த்து காத்திருக்கின்றது. நன்றி

 

நிர்வாகம் முத்தமிழ் மன்றம் சௌத்தென்ட்