முத்தமிழ் மன்றம் – செளத்தென்ட் என்பது தமிழ் மொழி மற்றும் கலை பண்பாட்டு விழுமியங்களை பேணிப் பாதுகாப்பதற்காகவும் எமது அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதற்காக செளத்தென்ட் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் தமிழை போற்றி வளர்க்கும் அமைப்புகளான
செளத்தென்ட் தமிழ் கல்விக்கூடம் ( SouthendTamilSchool )
ஒன்றுபட்ட தமிழினம் – செளத்தென்ட் ( United Tamils of Southend )
நாம் தமிழர் - செளத்தென்ட்கிளை ( Naam Tamilar Southend )
தமிழ் வீச்சு எங்கள் மூச்சு வலையொளி ( TamilVeechchuYouTube )
மற்றும் சைவநெறிக் கூடம் – செளத்தென்ட் ( Saivanerikkoodam -Southend )
ஆகிய அமைப்புகளால் 01- 02- 2022 அன்று உருவாக்கப்பட்டது
தமிழ் மொழி மற்றும் கலை பண்பாட்டு விழுமியங்களை பேணிப் பாதுகாப்பதற்காகவும் எமது அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதற்காகவும் ஒன்றிணைந்துள்ள இவ் அமைப்புகளின் முயற்சிக்கு தமிழின் பால் பற்றுறுதி கொண்ட அனைவரும் ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருப்பீர்கள் என நம்புகின்றோம்.
நன்றி
முத்தமிழ் மன்றம் – செளத்தென்ட்
தமிழால் நம் உறவு – தமிழால் நம் உயர்வு
நீண்ட நெடுங்காலமாக தமிழர் வீர வரலாற்றோடும் அவர்தம் வீரத்தின் வெளிப்பாடாகவும். தொடர் பாய்ச்சலுக்காகவும் மரபு வழியே புலி எனும் அடையாளத்தைத் தமிழர்கள் தாங்கி வந்துள்ளனர்.
அவ்வழியே நாமும் கருத்திலேந்தி புலியைத் தேர்வு செய்தோம். தமிழர்களின் தனிப்பெருங்கண்டமாகிய கடல்கொண்ட குமரிக்கண்டத்தை நீல நிறத்தில் நினைவில் நிறுத்தி தமிழர்களை அடையாளப்படுத்தும் புலியின் முகத்தினுள் நிறுவினோம்.
முத்தமிழின் மூலமாகிய இயல், இசை, நாடகத்தை குறிக்கும் முகமாக ஓலைச்சுவடி, தவிலுடன் நாதசுரம், முகமூடி ஆகியவற்றை குமரிக் கண்டத்தின் மும்முனைகளிலும் நிறுத்தினோம். நடுவில் கையைால் வரையப்பட்ட பழம்பெரும் ஓவியமான யாழின் இசை மீட்டும் முன்னவரை பதிந்தோம்.
தமிழரின் கலை நயத்தோடு வரவேற்கும் கலைமகளையும், பண்டைத் தமிழரின் வீரம் போற்ற முழங்கும் சங்குகளையும், எம் மரபினத்தின் தேசிய உணவைக் குறிக்க நெற்கதிரையும், தமிழீழ தேசியக் கொடியின் நான்கு வர்ணங்களையும் முதன்மையாகக்கொண்டு உலகில் தோன்றிய முதல் மாந்தராகிய தமிழர்கள் தமது உணர்வுகளைப் பரிமாறிக் கொள்ள தோற்றுவித்த மூத்தமொழி தமிழையும் வரிகளில் பொறித்தோம்.
ஐக்கிய இராச்சியத்திலும் நாம் வாழ்வதனால் இந்நாட்டுக் கொடியினையும், உலகம் முழுவதும் நாம் பரந்துபட்டு வாழ்ந்தாலும் நம்மை இணைப்பது தாய்மொழி தமிழே என்பதற்கு "தமிழால் நம் உறவு - தமிழால் நம் உயர்வு" எனும் தாரக மந்திரத்தையும் உச்சரித்தோம்
-நன்றி-
+44795 744 1521
+44753 569 2693
+44794 008 7652
+44796 178 2703
+44795 803 8037
+44798 652 7848
+44799 048 4929